Showing posts with label களங்கமில்லா கற்பு.. Show all posts
Showing posts with label களங்கமில்லா கற்பு.. Show all posts

Sunday, 25 November 2012

களங்கமில்லா கற்பு



குடுகுடு கிழவியவள்
கூட்டமில்லாத பேருந்தில்   
கூடைப் பையுடன் ஏறினாள்
இருக்கைகள் எங்கும் இருவராயிருக்க
நான் மட்டும் தனித்திருந்தேன்
தயக்கத்துடன் நெருங்கியவள்
தாராளமாய் இடமிருந்தும்…..!
இருக்கையில் எனக்கருகே இடம்விட்டு
ஓரத்தில் ஒட்டிக் கொண்டாள்…
இருவருக்குமான இடைவெளியில்
இறுமாப்புடன் அமர்ந்திருந்தது
இந்திய பெண்களின் கற்பு…..!?
தளர்வான பிடியால்
தடுமாறி கீழே விழுந்தாள்
தலையில் காயம்பட
பதற்றத்தில் பதறிக் கொண்டிருந்தோம்…..
பவ்யமாய் பல் இளித்தது…..
எங்களூர் பெண்களின் கற்பு….