Sunday, 10 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா:

கதை தேர்வில் தொடர்ச்சியாக கோட்டைவிட்டு தோல்வியடைந்து வரும் கார்த்தியும், கதையே தேர்வு செய்யாமல் வெற்றியடைந்து வந்த N. ராஜேஷும் இணைந்து கோட்டைவிட்டு ஒரு மறக்கமுடியாத… இல்லை இல்லை… ஜீரணிக்கவே முடியாத ஒரு தோல்விப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதுதான் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா. வெற்றி கண்டிப்பாக தேவைப்படும் சூழலில் இருக்கும் கார்த்தி, அவர் எந்தவிதமான இயக்குநர் என்று சற்றும் யோசிக்காமல் தொடர்ந்து மூன்று வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் என்ற ஒரே காரணத்துக்காக கண்மூடித்தனமாக ராஜேஷை நம்பியதற்கு தக்க சன்மானம் கிடைத்திருக்கிறது… கார்த்தியின் நடிப்பிலும் பல இடங்களில் ஒரே மாதிரியான பாவனைகள்… இதையெல்லாம் திருத்திக் கொண்டு அவர் விழித்துக் கொள்ளவில்லை என்றால்…? அவரது இடம் பறிபோவது நிச்சயம்…ராஜேஷின் படங்களை வரிசையாக எடுத்துப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.. எதிலுமே கதை என்னும் வஸ்து பெயரளவுக்கு கூட இருக்காது.. நாயகன், நாயகி படத்துக்கு தேவை என்பதால் அவர்கள் இருப்பார்கள்.. சந்தானம் இருப்பார்.. சரக்கு இருக்கும்… இது போக காதல் இருக்கும்.. அதில் ஒரு பிரச்சனை இருக்கும்.. க்ளைமாக்சில் காதல் கடனே என்று கைகூடும்.. இப்படி அவர் எடுத்த மூன்று படங்களுமே ஏன் ஓடியது என்றே தெரியாமல் அப்படி ஒரு ஒட்டம் ஓடி அதிரிபுதிரியான ஹிட்டு.. அப்படி ஒரு ஹிட்டை நீங்கள்…… என் மக்களே… நீங்கள்….. கொடுத்ததுனால் தான் ”இவனுக என்ன அடிச்சாலும் தாங்குறானுகடா… நாம படங்குற பேர்ல என்ன கொடுத்தாலும் இவனுக பாப்பாய்ங்க..” என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலும் இயக்குநர்… தைரியம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள்…..

படத்தில் நாடோடிக் கலைஞராக சாட்டையைக் கொண்டு தன்னைத் தானே அடித்துக் கொண்டு அலையும் எம்.எஸ்.பாஸ்கர் பேசுவது போல் ஒரு வசனம் வரும்.. அவரிடம் தனது டிவிக்காக பேட்டி எடுக்கும் கார்த்தி கேட்பார்.. “நீங்க ஏன் இந்த கலையை தேர்ந்தெடுத்தீங்க…” அதற்கு எம்.எஸ். அந்த டிவி அறையைப் பார்த்துக் கொண்டே கார்த்தியிடம் சொல்வார், ” நீங்க எதுக்கு இந்த கலையை தேர்ந்தெடுத்தீங்களோ அதுக்குத்தா…” என்பார்.. “புரியலையே..” என்று சொல்லும் கார்த்தியைப் பார்த்து “எல்லா இந்த வயித்துப் புழைப்புக்குத்தா…” என்பார்… அதை பார்க்கும் போதே எனக்கு, நாம் ராஜேஷைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்க.. அவரும் இதே பதிலை நம்மிடம் சொல்வது போல் தோன்றியது…

இப்படி ஒரு உலகமகா காவியத்தைக் கொடுப்பதற்குத்தான் டீசர் என்ற பெயரில் அத்தனை பில்டப்பா… என்று நினைக்கும் போது ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது… டீசரைப் பார்த்து விசில் அடித்து, கைதட்டி ஆர்பரித்த அந்த விசிலடிச்சான் குஞ்சுகளும்.. நம் தமிழக குடி…மகன்களும் சேர்ந்து இந்தப் படத்தையும் வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்பி…. படம் எடுத்துவிட்டார் போல பாவம்…. ஆனால் ஒன்று இயக்குநர் ராஜேஷ் அவர்களே..! உங்கள் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைகாவியத்தை விட.. அந்த முகேஷ் விளம்பரம் ஆயிரம் மடங்கு மேலானது…. முகேஷை எப்படி கேலி செய்வது என்று யோசித்த தருணத்தில் கொஞ்சம் கதையையும் யோசித்து….. ஸாரி… ஸாரி… ஸாரி… அதுதா உங்களுக்கு தெரியாதே… உருப்படியா வேற எதாது காமெடியவாது யோசிச்சிருக்கலாம்… படம் தப்பிச்சிருக்கும்… ஒரு டவுட்டு சார்…. அந்த டீசர்ல உங்களை பேசக்கூட விடாம.. பின்னாடி ஒரு கூட்டமே உக்காந்து ரொம்பத் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்களே…. அதுவும் இந்த மகாகாவியத்தைப் படைக்கத்தானா…..!!!!!!!??????????? அய்யய்யோ… இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுதே… சரக்கு இல்லாம நீங்க எடுத்த ஒரே படம் இது…. இதுவும் ஊத்திக்கிச்சி… இனி நீங்க எடுக்குற அடுத்தப் படத்துல தியேட்டரேல கப்புல மிதக்கும்….????

என் பொதுஜனமே… எனக்கும் இயக்குநருக்கும் எந்த முன்விரோதமும் இல்லை… ஆனால் நமக்கு நல்லதாக படுகின்ற சில விசயங்கள் அவருக்கு கெட்டதாகப்பட்டதால், அதை கேலி செய்யும் பொருளாக அவர் எடுத்துக் கொள்ளும் போது, அவருக்கு நல்லதாகவும் எனக்கு கெட்டதாகவும் படுகின்ற விசயங்களை அவரது பாணியிலேயே, அதே தர்க்கரீதியில் தான் நான் மேலே  கேலியும் கிண்டலும்.. செய்திருக்கிறேன்.. ஆனால் அவை அப்பட்டமான உண்மை என்பதையும் மறுப்பதற்கு இல்லை… தவிர்க்கமுடியாத மனநிலையில் சில விசயங்களை காட்டமாக சொல்ல வேண்டியதாகி விட்டது….


மொத்தத்தில் பத்து ரூபாய் டிக்கெட்டை முப்பத்தைந்து ரூபாய்க்கு ரிசர்வ் செய்துதான் இந்தப் படத்தைப் பார்த்தேன்… ஆனால் படம் அந்த பத்து ரூபாய்க்குக் கூட சமானம் இல்லை.. என்பதே வேதனையான உண்மை.. இதையும் மீறி படம் பார்க்க விரும்புபவர்களுக்கு நானே டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறேன்.. ஒரே ஒரு கண்டிஷன்… முழு படம் முடிந்தப் பிறகுதான் தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டும்…. நான் ரெடி… நீங்க…?

No comments:

Post a Comment