Thursday 24 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா



பல வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் வந்த “இன்று போய் நாளை வா” திரைப்படத்தின் கதையை எடுத்துக் கொண்டு அதை சந்தானத்திற்கே உரித்தான உட்டாலக்கடி பாணியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். பாக்யராஜ்க்கு நன்றி என்னும் டைட்டில் கார்ட்டுடன் தொடங்குகிறார்கள் படத்தை…

இன்று போய் நாளை வாவில் ஒரு அடல்சண்ட் டச் இருக்கும்.. அதுதான் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம். ஆனால் அது கலதிஆவில் மிஸ்ஸிங்.. (பின்ன மிஸ் ஆகாம எப்படி இருக்கும்.. 50ஐ தாண்டுன ஒருத்தர்.. 40ஐ நெருங்கும் ஒருத்தர்… 30ஐ நெருங்கும் இன்னொருத்தர்…) எதிர் வீட்டு பெண்ணை யார் கரெக்ட் செய்வது என்ற பிரச்சனை வர, நண்பர்கள் எதிரிகளாகி காய் நகர்த்த… கடைசியில் என்ன ஆனது என்பதை சந்தானம் குரூப் அவர்களுக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார்கள்..

படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பவர்ஸ்டார்தான் (சாமி சத்தியமா பாஸ்….) என்ன ஒரு கவலை… இத வெச்சே நம்ம ஆடியன்ஸ் இவரோட அடுத்த ரெண்டு படத்தையும் ஓட வெச்சிருவாங்களே… (பவர் ஸ்டார் நீங்கதா எப்டியாது தமிழ் சினிமாவ காப்பாத்தணும்… ஏதோ பாத்து பண்ணுங்க…) ஓபனிங்கே செம்ம அலப்பரையான எண்ட்ரி… டாக்டர் ஸ்கூல் பிள்ளைகளுடன் பிரச்சனை செய்து கொண்டிருக்க.. உள்ளே எண்ட்ராகும் சந்தானம் கேப்பார்.. டேய் சின்ன பசங்களோட என்னடா பிரச்சனை… (எல்லா பசங்களும் சேர்ந்து…) ம்ம்ம்… நல்லா கேளுங்கண்ணா…. அதற்கு சந்தானம் சொல்லுவாரு ஸ்கூல் பையன்கள பாத்து… “டேய் நா உங்கள கேட்டேன்….” இப்படி ஆரம்பிக்கிற கலாட்டா… படத்தோட க்ளைமாக்ஸ் வர ஓயமாட்டேங்குது….

எதைப்பற்றியும் யோசிக்காமல்… தமிழ்சினிமா ரசிகர்களின் மனோபாவம் எந்தமாதிரி இருக்கிறது… என்றெல்லாம் தர்க்கரீதியாக யோசிக்காமல்.. பொழுதுபோகணும்… சிரிக்கணும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன் தியேட்டருக்கு வரும் கூட்டத்திற்கு என்றே எடுக்கப்பட்ட படம்….

கண்ணா லட்டு தின்ன ஆசையா….. இன்று போய் நாளை வாவின் லொள்ளு சபா ரீமேக்… என்ன விஜய் டிவிக்கு பதிலாக ஒளிபரப்பாவது வெள்ளித்திரையில்… 

No comments:

Post a Comment